கானாவின் பில்லிசூன்ய மருத்துவர் (Witch Doctor) ஒருவர் தனது நாட்டிற்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து வீரர் கேன், கோல் அடிக்கமாட்டார் என்று அவர் கூறியது போலவே இன்று நடந்ததால் அவர் சமூக வலைதளத்தில் மிகவும் புகழ்பெற்று வருகிறார்.
உலகக் கோப்பையில் குரூப் எல் பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து - கானா போட்டி சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் 79ஆவது நிமிடத்தில் கானாவின் ஃபார்வேட் பிரின்ஸ் அபு கோல் அடிக்கும் முயற்சியில் பெனால்டி பாக்ஸிற்குள் நுழைய, இங்கிலாந்தின் டிஃபெண்டர் எஜ்ரி கோன்ஸா தனது முழங்காலினால் தடுத்து, கானா வீரரை கீழே விழ வைத்தார்.
இந்தத் தவறுக்கு ஃபிஃபா விதியின்படி கானா அணிக்கு பெனால்டி அளித்திருக்க வேண்டும். ஆனால், நடுவர்கள் இதனைப் பரிசீலிக்காதது சர்ச்சையானது. இதனைவிட முக்கியமானது, இந்தப் போட்டியில், “இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் கோல் அடிக்க மாட்டார்” எனக் கூறிய பில்லிசூன்ய மருத்துவர் மிகவும் வைரலாகி வருகிறார்.
கானாவுக்கு எதிரான போட்டியில் ஹாரி கேனுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டது இந்த பில்லிசூன்ய மருத்துவர் கணிப்பு பெரிதாக வைரலாகியுள்ளது.
கானா அணி தனது முதல் போட்டியில் பனாமாவை வென்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்துடன் சமன்படுத்தியது. இதனை முன்பே கணித்த கானாவின் மந்திரவாதி சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளார்.
நானா குவாகு போன்சாம் என்பவர் கானாவின் மிகவும் புகழ்பெற்ற பில்லிசூன்ய மருத்துவர் (Witch Doctor) ஆக இருக்கிறார். ஆங்கில ஊடகம் ஒன்றில் இவர் போட்டிக்கு முன்பாக பேசியது வைரலானது. அதில் அவர் பேசியிருந்தாவது:
நான் ஹாரி கேன் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். என்னால் என்ன முடியும் என்பதை முன்பே காட்டியிருக்கிறேன். அதனால், அவரை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன்.
Trending: Two days ago a strong Ghanaian juju man vowed to disable Harry Kane for the World Cup Match. Indeed Kane fired blanks.
— Trending Explained (@TrendingEx) June 24, 2026
âI told you I will stop Kane. I wonât injure him, he wonât just be seeing the ball. Iâve done it before, I did it again.â
â Nana Kwaku Bonsam ð§ð¾ââï¸ð§ pic.twitter.com/4dzglaZeqA
எனது கணிப்புக்கு நான் மிகவும் பிரபலமானவன். அவருக்கு தீவிரமான காயம் ஏற்படுமென நான் விரும்பவில்லை. எனது நாட்டுக்கு எதிராக கோல் அடிக்கக் கூடாதென மட்டுமே தடுக்கிறேன். நான் வேலை செய்தால், அது எனது நாட்டிற்கு உதவும் என்றார். அதேபோல ஹாரி கேன் ஒரு கோல் கூட அடிக்காதது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்?
ஆப்பிரிக்க பாரம்பரிய மந்திரவாதியாக இருக்கும் கானாவைச் சேர்ந்தவர் நானா குவாகு போன்சாம் (Nana Kwaku Bonsam). கடந்த 20 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தங்களது நோக்கத்தை நிறைவேற்ற உதவியதாகவும் கிறிஸ்துவம், காலனி ஆதிக்கம் இருப்பினும் ஆப்பிரிக்காவில் உண்மையான சக்தி இருக்கிறதாகவும் தனது இணையத்திலும் முகநூல் பக்கத்திலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போன்சாம் தன்னை மூலிகை மருத்துவர் எனக் குறிப்பிடுகிறார். அவர் வழக்கமான மருந்துகளால் சரிசெய்யமுடியாத சில குறிப்பிட்ட உடல், மன உபாதைகளைத் தன்னால் தீர்க்க முடியுமெனக் கூறுகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 2014ல் ஏற்பட்ட காயத்துக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. ”நான்கு மாதங்களுக்கு முன்பாக ரொனால்டோவுக்காக தீவிரமாக பணியாற்றினேன். அவருக்கு காயம் ஏற்பட்டு எனது நாட்டுக்கு எதிராக விளையாட முடியாதபடி செய்தேன்” என்ற அவரது நேர்காணல் மிகவும் வைரலானது.
கானா - இங்கிலாந்து போட்டிக்குப் பிறகு தனது முகநூல் பக்கத்தில் போன்சாம், “மொத்த உலகத்தில் நான்தான் மிகப்பெரிய ஆன்மிகவாதி. நான் இப்போது ஹாரி கேனை விடுவிக்கிறேன். அதனால், அவர் அடுத்த போட்டியில் கோல் அடிக்கலாம். லவ் யூ சகோதரரே (ஹாரி கேன்)” எனக் கூறியுள்ளார்.
ð¬ðâI am the most powerful spiritualist in the world. I am now going to release Harry Kane so that he can score in Englandâs next match.â
— we love ghana (@weloveghana042) June 24, 2026
â Nana Kwaku Bonsam said as he claimed to have spiritually tied England captain Harry Kane before now âreleasingâ him. pic.twitter.com/YYO1fTZ6mt
இந்தப் போட்டியில் மற்றுமொரு கானாவின் மந்திரவாதி ஓகோம்ஃபோ அனோக்யே பங்கேற்று திருநீறு போன்ற சாம்பலை காற்றில் பறக்கவிட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
â¸ï¸ HYDRATION BREAK (â±ï¸70â)
— ð Ghana ð¬ð (@xghana_) June 23, 2026
England ð´ó §ó ¢ó ¥ó ®ó §ó ¿ 0ï¸â£ - 0ï¸â£ Ghana ð¬ð
Bro just signed-In ð pic.twitter.com/uTXsdWXA2T
Summary
Who's The 'Witch Doctor'? Ghanaian Mystic Viral After 'Curse' On England's Harry Kane For World Cup Match
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











