கால்பந்து உலகக் கோப்பை லீக் போட்டியில் நார்வே அணி செனகலை 3-2 என வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியது. வெற்றிக்குப் பிறகு அந்த அணி களத்திலேயே ’வைக்கிங் ரோ’ என்ற கொண்டாட்டத்தை அரங்கேற்றியது.
இந்தப் போட்டியில் 43ஆவது நிமிஷத்தில் மார்கஸ் நார்வே அணியின் ஹோல்ம்கிரென் பெடர்சன் கோல் அடித்தார். அடுத்து 48, 58ஆவது நிமிஷத்தில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து அசத்தினார்.
செனகல் அணியின் சார்பாக இஸ்மாயிலா சர் 53, 90+3ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இருந்தும் நார்வே 3-2 என வென்றது.
’வைக்கிங் ரோ’ என்றால் என்ன?
நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வான மகிழ்ச்சியில் நார்வே வீரர்கள் ரசிகர்களுடன் இணைந்து, ’வைக்கிங் ரோ’ என்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இது நார்வே நாட்டின் மிகவும் பழமையான தொழிலைக் குறிப்பிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைக்கிங் காலகட்டம் என்பது கி.பி. 700 முதல் 1,100 வரை எனக் கூறப்படுகிறது. இதன் பொருள் இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஸ்கான்டிநேவியா (இன்றைய டென்மார்க், நார்வே, ஸ்வீடன்) உள்ள கடற்படை வீரர்களைக் குறிக்கிறது.
தங்களது சொந்த நாட்டை விட்டு பிரிட்டனுக்குச் சென்று இவர்கள் வாணிகம் செய்பவர்களாகவும், சிலர் வரலாற்று அறிஞர்கள் கூற்றுபடி இவர்கள் கடற்கொள்ளையில் ஈடுபடுவர்களாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துடுப்பு போடுதல் என்பது வைக்கிங் வீரர்களுக்கானது. நார்வே நாட்டின் அடையாளங்களுல் ஒன்றாகக் கருதப்படுகிறது.
களத்தில் ஒரு வீரர் மேளத்தை இசைக்க மற்ற வீரர்கள் துடுப்பு போடுவது போல் சைகை செய்தார்கள். திடலில் இருந்த நார்வே அணியின் ரசிகர்களும் இதேபோல் செய்தார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
முதன்முதலாக இந்தக் கொண்டாட்டத்தை 2016 யூரோ கோப்பையில் ஐஸ்லாந்து அணி ’வைக்கிங் தண்டர் கிளாப்’ எனச் செய்து வைரலானது. தற்போது, இந்தக் கொண்டாட்டம் மீண்டும் நார்வே அணியினால் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில் முதல் கோல் அடித்த மார்கஸ் ஹோல்ம்கிரென் பெடர்சன், “எனக்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கக் கூட முடியவில்லை. தேசிய அணிக்கான எனது முதல் கோல் இது. எனக்கு இது மிகப்பெரிய சாதனை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட கடினமாக உழைத்துள்ளேன். 10 நிமிஷத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டேன். எனக்கு வார்த்தைகள் இல்லை. இது நம்பமுடியாத உணர்வு” எனக் கூறினார்.
Summary
What Is Viking Row Celebration? Norway's FIFA World Cup 2026 Celebration That Gone Crazy Viral
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

6/32: உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 6 அணிகள்!

மாற்று வீரரின் சாகசம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜெர்மனி!

இத்தாலி வரைக்கும் சென்ற லக்ஷ்மி அம்மாள், நரோடா ஆடியோ..! வைரலாகும் ஜுவென்டஸ் அணியின் ரீல்ஸ்!

அமெரிக்காவில் அனுமதி மறுப்பு... நாடு திரும்பிய உலகக் கோப்பை நடுவருக்கு உற்சாக வரவேற்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




