கால்பந்து உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை கடந்த 20 ஆண்டுகளாக 90 நிமிஷங்கள் அடங்கிய ரெகுலர் டைமிங்கில் எந்த அணியும் தோற்கடித்ததில்லை என்ற வரலாறு இப்போதும் தொடர்கிறது.
கடைசியாக 2006ல் போர்ச்சுகல் அணி நெதர்லாந்தை 90 நிமிஷ ரெகுலர் டைமிங்கில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மொராக்கோ உடனான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நெதர்லாந்து 1-1 என கூடுதல் நேரம் வரை இருந்தது. பின்னர், பெனால்டியில் 2-3 எனத் தோல்வியுற்றது.
கடந்த 2022 உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவை காலிறுதியில் 2-2 என சமன்படுத்தி கலங்கடித்தது. அங்கும் பெனால்டியில் தோல்வியுற்றது.
நெதர்லாந்து அணி 2018 உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை. அதற்கு முன்னதாக, 2014 உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவுடன் டிரா செய்து, பெனால்டியில் 2 - 4 என தோல்வியுற்றது.
இதற்கும் முன்னதாக 2010 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரெகுலர் டைமிங்கில் ஸ்பெயினிடம் டிரா செய்த நெதர்லாந்து கூடுதல் நேரத்தில் (116ஆவது நிமிஷத்தில்) ஒரு கோலை இழந்து தோல்வியுற்றது.
இந்த உலகக் கோப்பையிலும் குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் ஜப்பானுடன் 2-2 என சமன்படுத்தியது. மொராக்கோவுடன் டிரா செய்து பெனால்டியில் தோல்வியுற்றது. இருந்தும் 20 ஆண்டுகளாக 90 நிமிஷத்திற்குள் தோற்கடிக்க முடியாத அணியாக தனது சாதனையை நீட்டித்து வருகிறது.
Summary
No one has defeated the Netherlands in under 90 minutes in two decades. Morocco won Yet the record remains
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

40 ஆண்டுகள் கனவு நனவானது... ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!

ஃபிஃபா உலகக் கோப்பை: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல்!

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அதிக கோல்கள்..! சாதனையை சமன்செய்த ஹாரி கேன்!

96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து வரலாறு படைத்தது மெக்சிகோ!
விடியோக்கள்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS





