நெதர்லாந்து வீரர் கோடி காக்போ (27 வயது) தான் கோல் அடித்த பிறகு, அதனை இரண்டு நாள்களுக்கு முன்பாக இறந்துபோன தனது குழந்தைக்குச் சமர்பித்தார். அவர் வெளியேறும்போது ரசிகர்கள் எழுந்து நின்று கரவோசையை எழுப்பி மரியாதை செலுத்தினர்.
ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மோதிய நெதர்லாந்து - மொராக்கோ போட்டி மிகவும் விருவிருப்பாகச் சென்றது. இதில் 1-1 என சம நிலையில் முடிந்ததால். ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்குச் சென்றது.
பெனால்டியில் நெதர்லாந்து அணி 2-3 என தோல்வியுற்றது. இதனால், உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியில் 72ஆவது நிமிஷத்தில் கோடி காக்போ கோல் அடித்து அசத்தினார். கோல் அடித்ததும் மண்டியிட்டு வான் நோக்கி கையை உயர்த்தி பிரார்த்தனை செய்தார். சக வீரர்களும் அவரைக் கட்டியணைத்தார்கள்.
கடந்த சனிக்கிழமை காக்போவின் மனைவி நோவா வான் டெர் பிஜ் கருவில் இருந்த 5-6 மாதங்களான குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தத் துயரத்துக்குப் பிறகும் காக்போ நாட்டிற்காக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார்.
இந்தப் போட்டியின் 113ஆவது நிமிஷத்தில், கீழே விழுந்ததால் காக்போ போட்டியில் இருந்து வெளியேறினார். அப்போது திடலில் இருந்த நெதர்லாந்து ரசிகர்கள் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.
This video Cody Gakpo breaks my heart ð
— Ipostanything LFC (@postanythingLFC) June 30, 2026
Look at him fighting through the tears after scoring for Netherlands. pic.twitter.com/rxasRRVuWE https://t.co/lbJ59H9eAC
Summary
A goal, a prayer and a standing ovation for Netherlands Cody Gakpo amid personal grief
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

90 நிமிஷத்திற்குள் தோற்கடிக்க முடியாத அணி: 20 ஆண்டுகளாகத் தொடரும் நெதர்லாந்தின் கம்பீர சாதனை!

ஃபிஃபா உலகக் கோப்பை: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல்!

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!








