ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

4 வயது குழந்தைக்குத் தாய், பிஎச்டி ஆய்வு... காமன்வெல்த் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற சீமா!

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா காளிராம்னா வெண்கலம் வென்றது குறித்து...

Seema Kaliramna

சீமா காளிராம்னா - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :31 ஜூலை 2026, 12:47 pm IST

காமன்வெல்த் வட்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சீமா காளிராம்னா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தப் பதக்கத்துடன் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள் இந்த காமன்வெல்த் தொடரில் கிடைத்துள்ளன. அதில் 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் இருக்கின்றன.

வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை சீமா காளிராம்னா 58.65 மீட்டர் தூரத்துக்கு வட்டு எறிந்து அசத்தினார். இதன்மூலம் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

இந்தப் பிரிவில் ஜமைக்காவின் சமந்தா ஹால் 61.66 மீட்டருக்கு வட்டு எறிந்து தங்கம் வெல்ல, கனடாவின் ஜூலியா டுன்க்ஸ் 60.67 மீட்டருக்கு வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்கள்.

இந்தப் போட்டியில் சீமா தொடக்கத்தில் பௌல்களாகச் செய்து, கடைசி வாய்ப்பில் அசத்தலாக வட்டு எறிந்தார். மற்றுமொரு இந்திய வீராங்கனை நிதி ராணி நான்காம் இடம் பிடித்தார்.

இந்திய வீராங்கனை சீமா காளிராம்னா (27 வயது) ஹரியாணாவைச் சேர்ந்தவர். இவருக்கு 4 வயதில் குழந்தை இருக்கிறது. இவர் சிபிஎல்யூ (சௌதரி பன்சி லால் பல்கலைக்கழகம்) உடற்கல்வி பிரிவில் பிஎச்டி ஆய்வு செய்து வருகிறார்.

சீமா கடந்த 2025 தேசிய போட்டியில் தங்கம் வென்றிருந்தார். பலரும் இவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

Summary

Commonwealth Games 2026: Seema Kaliramna, PhD aspirant and mother of a four-year-old, wins discus throw bronze medal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.