ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த்: ஜூடோ இறுதிப் போட்டியில் தவறுகளால் தங்கப் பதக்கத்தை இழந்த யாமினி!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யாமினி குறித்து...

**EDS: RPT, CORRECTS NAME AND EVENT CATEGORY** Glasgow: India's Yamini Mourya before a women's 57kg judo match at the 23rd Commonwealth Games, in Glasgow, Scotland, Friday, July 31, 2026. Dey stormed into the finals and will face Canada's Heidi Quach. (PTI Photo/Ravi Choudhary) (PTI07_31_2026_RPT404A)

யாமினி மௌரியா - படம்: பிடிஐ

Published On :1 ஆகஸ்ட் 2026, 11:10 am IST

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஜூடோ 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை யாமினி மௌரியா (28 வயது) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

மகளிர் ஜூடோ 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை யாமினி மௌரியா இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் அசெல்யா டோப்ரக் உடன் மோதினார்.

இதில் 6 நிமிஷங்கள் 54 நொடிகள் போராடிய யாமினி மௌரியா மூன்று முறை ஷிடோ பெனால்டியைப் பெற்றதால், எதிராளி வென்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் யாமினியின் உடல் தகுதி, தடுப்பாட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த காமன்வெல்த் தொடரில் இது ஜூடோவில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்கள்.

இத்துடன் இந்தியாவுக்கு 22 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில், 5 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசைப் பட்டியலில் இந்தியா 10ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.

Summary

Yamini Mourya adds to India's tally, clinches silver in judo women's 57kg event at Commonwealth Games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.