ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தடை தாண்டுதல்: இறுதிப் போட்டியில் பதக்கத்தை இழந்த இந்திய வீராங்கனை!

காமன்வெல்த் 3000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீராங்கனை பாரூல் சௌதரி குறித்து...

Glasgow: Indias Parul Chaudhary finishes fifth in the womens 3000m steeplechase final at the Commonwealth Games 2026, in Glasgow, Scotland, Thursday, July 30, 2026. (PTI Photo/Ravi Choudhary)(PTI07_30_2026_000040B)

இந்திய வீராங்கனை பாரூல் சௌதரி. - படம்: பிடிஐ

Published On :30 ஜூலை 2026, 2:11 pm IST

கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் 3000 மீட்டர் தடை தாண்டும் தடகளத்தில் இந்திய வீராங்கனை பாரூல் சௌதரி (31 வயது) இறுதிப் போட்டியில் பதக்கத்தை இழந்தார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

மகளிர் 3000 மீட்டர் தடை தாண்டுதலில் இந்தியாவின் பாரூல் சௌதரி இறுதிப் போட்டியில் 9:26.75 நிமிஷங்களில் கடந்து அசத்தினார். ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தைப் பிடித்த பாரூல் பதக்க வாய்ப்பை இழந்தார்.

முதலிடத்தில் கென்யாவின் ஃபெய்த் செரோடிச் 9:01.76 நிமிஷங்களில் முடித்து தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலம் முறையே இங்கிலாந்து, உகாண்டா வீராங்கனைகள் பெற்றார்கள்.

முன்னதாக, பாரூல் செளதரி பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் சுற்றில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தார். இந்த நிலையில், காமன்வெல்த் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றுள்ளார்.

இதுவரை இந்திய அணி 15 பதக்கங்களை (3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ளது. குத்துச்சண்டையில் 10 பதக்கங்கள் கிடைக்குமென மிகுந்த எதிர்பார்ப்பில் இந்திய அணி இருக்கிறது.

Summary

CWG 2026: Indian Athletics, Parul Chaudhary finished 5th in the Women's 3000m Steeplechase Final, clocking a time of 9:26.75.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.