ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 6ஆவது பதக்கத்தை உறுதிசெய்த அருந்ததி!

காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து...

Indian boxer Arundhati Choudhary

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சௌதரி. - படம்: எக்ஸ் / சாய் மீடியா.

Published On :29 ஜூலை 2026, 6:41 pm IST

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சௌதரி (23 வயது) அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு, குத்துச்சண்டைப் பிரிவில் ஆறாவது பதக்கத்தையும் உறுதிசெய்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23ல் தொடங்கின. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சௌதரி மகளிர் 70 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை மார்கன் ஹென்டர்சன் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில், சாக்‌ஷி சௌதரிக்கு மூன்று நடுவர்கள் சாதகமாகவும் ஒரு நடுவர் மார்கன் ஹென்டர்சனுக்கு ஆதரவாகவும் ஒரு நடுவர் சமமான புள்ளிகளையும் வழங்கினார்கள். இதன் மூலம், மெஜாரிட்டி ஸ்பிலிட் முறையில் 3-1 என சாக்‌ஷி சௌதரி வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக, லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ எடைப் பிரிவு), ப்ரியா கங்காஸ் (60 கிலோ எடைப் பிரிவு), ப்ரீத்தி பவார் (54 கிலோ எடைப் பிரிவு), ஜடுமானி சிங் (55 கிலோ எடைப் பிரிவு), சாக்‌ஷி சௌதரி (51 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் பதக்கம் வெல்லும் நிலையில், இதில் ஆறாவது வீராங்கனையாக அருந்ததி சௌதரி இணைந்துள்ளார்.

இந்த அரையிறுதிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இந்தியா 12 பதக்கங்களை (2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ள நிலையில், குத்துச்சண்டையில் மட்டுமே 6 பதக்கங்கள் உறுதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Arundhati Choudhary assures sixth boxing medal for india at cwg

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.