ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த் பளுதூக்குதல்: ஒரு கிலோ வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்த லவ்ப்ரீத் சிங்..! ஸ்நாட்ச் பிரிவில் உலக சாதனை!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் லவ்ப்ரீத் சிங் குறித்து...

Glasgow: New Zealand's David Andrew Liti, centre, gold medallist, India's Lovepreet Singh, left, silver medallist, and England's Andrew Griffiths, bronze medallist, pose during the medal ceremony for the Men's +110kg weightlifting event at the Commonwealth Games 2026, in Glasgow, Scotland, Thursday, July 30, 2026. Lovepreet finished with a total lift of 388kg to claim the silver medal. (PTI Photo/Aparajita Upadhayay)(PTI07_31_2026_000043B)

பதக்கம் வென்றவர்கள். (இடது). வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர் (வலது). - படங்கள்: பிடிஐ

Published On :31 ஜூலை 2026, 12:04 pm IST

கிளாஸ்கோ காமன்வெல்த் ஆடவருக்கான 110 கிலோவுக்கும் அதிகமான எடைப் பிரிவில் பளுதூக்குதலில் இந்திய லவ்ப்ரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தப் பதக்கத்துடன் இந்தியாவுக்கு 16 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 3 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்திய வீரர் லவ்ப்ரீத் சிங் ஸ்நாட்ச் பிரிவில் 176 கிலோ பளுவைத் தூக்கி சாதனை படைத்துள்ளார். க்ளீன், ஜெர்க் பிரிவில் 212 கிலோ பளுவைத் தூக்கினார். மொத்தமாக 388 கிலோ பளுவைத் தூக்கி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் ஸ்நாட்ச் பிரிவில் அதிகபட்ச பளுவைத் தூக்கி புதிய வரலாற்றை லவ்ப்ரீத் சிங் நிகழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்தின் தாவித் லிடி மொத்தமாக 389 கிலோ பளுவைத் தூக்கி தங்கம் வென்றார். இந்திய வீரர் லவ்ப்ரீத் சிங் ஒரு கிலோவில் இரண்டாம் இடம் பிடித்தார்.

முன்னதாக, பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டியில் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Commonwealth Games: Lovepreet Singh misses out on weightlifting gold by a margin of one kilogram. World record in the snatch event!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.