ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

98 சதவிகித துல்லியம்... 19 வயது டிஃபெண்டர் குபார்சிக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஃபிஃபா!

அறிமுக உலகக் கோப்பையில் அசத்தும் ஸ்பெயின் கால்பந்து அணியின் 19 வயதான நட்சத்திர டிஃபெண்டர் பௌ குபார்சி குறித்து...

A special poster of Pau Cubarsí.

பௌ குபார்சியின் சிறப்புப் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.

Published On :17 ஜூலை 2026, 6:02 pm IST

அறிமுக உலகக் கோப்பையில் ஸ்பெயின் கால்பந்து அணியின் 19 வயதான நட்சத்திர டிஃபெண்டர் பௌ குபார்சி அசத்தி வருகிறார். இவருக்கு ஃபிஃபா உலகக் கோப்பை சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினின் பெஸ்கானோ பகுதியில் 2007ல் பிறந்த பௌ குபார்சி பார்சிலோனா அணியில் 2024ல் அதாவது தனது 17ஆவது வயதில் இடம் பிடித்து ஐரோப்பாவின் கவனத்தை ஈர்த்தார்.

அறிமுக உலகக் கோப்பையில் விளையாடும் பௌ குபார்சி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 க்ளீன் ஷீட் பெற உதவியாக இருந்துள்ளார். குறிப்பாக, பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார்.

இதுவரை 600-க்கும் அதிகமான நிமிஷங்கள் வரை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். அதில் 19 முறை பந்தினை எதிரணியிடம் இருந்து மீட்டுள்ளார். 23 முறை தடுப்பாட்டத்திலும் செயல்பட்டுள்ளார்.

பந்தினை மீட்டுதல், இடைமறித்தல் என அசத்தும் பௌ குபார்சிக்கு ஒரேயொரு முறைதான் ட்ரிபிள் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெல்ஜியத்துக்கு எதிரான காலிறுதியில் இவருக்கு ஒரேயொரு முறை யெல்லோ (மஞ்சள்) கார்டு கிடைத்தது.

பந்தினை பாஸ் செய்யும் விதத்தில் 449ல் 432 முறை சரியாக செய்திருக்கிறார். அதாவது 98.4 சதவிகிதம் துல்லியமாக பாஸ் செய்து அசத்தியுள்ளார்.

லாமின் யமால் புகழப்படும் அளவுக்கு பௌ குபார்சி புகழப்படவில்லை கால்பந்து ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.

Summary

Spain Defender 19-year-old Pau Cubarsi is 98 percent accurate passing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.