ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

20 வயது மெஸ்ஸி - குழந்தையாக லாமின் யமால்..! உண்மையான புகைப்படமென யுனிசெஃப் உறுதி!

மெஸ்ஸியுடன் குழந்தையாக இருக்கும் லாமின் யமால் புகைப்படம் குறித்து...

Messi – Lamine Yamal as a child with his mother.

மெஸ்ஸி - குழந்தையாக லாமின் யமால் மற்றும் அவரது தாய். - படம்: எக்ஸ் / UNICEF, Joan Monfort

Published On :17 ஜூலை 2026, 4:39 pm IST

ஸ்பெயினின் தற்போதைய நட்சத்திர வீரர் லாமின் யமால் தான் குழந்தையாக இருக்கும்போது ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியிடம் இருக்கும் புகைப்படம் உண்மைதான் என யுனிசெஃப் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது, லாமின் யமாலுக்கு 19 வயதும் லியோனல் மெஸ்ஸிக்கு 39 வயதும் ஆகிறது. அந்தப் புகைப்படம் எடுக்கும்போது மெஸ்ஸிக்கு 20 வயதும் யமாலுக்கு ஒரு வயதும் எனக் கூறப்படுகிறது.இன்

கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா மோதவிருக்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 (திங்கள் அதிகாலை 12.30) மணிக்கு நடைபெற இருக்கிறது.

சமூக வலைதளங்களில் மெஸ்ஸியுடன் குழந்தையாக இருக்கும் யமால் புகைப்படம் அடிக்கடி பதியப்பட்டுவரும். இது உண்மைதானா என்ற சந்தேகத்துக்கு யுனிசெஃப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. யுனிசெஃப் தன் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஆமாம், அந்தப் புகைப்படங்கள் உண்மையானதுதான். 18 ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தையாக லாமின் யமாலும் அவரது தாய் ஷெலியா உடன் லியோனல் மெஸ்ஸி யுனிசெஃப் நிதியுதவிக்காக புகைப்படம் எடுக்கப்பட்டது.

இன்று, இருவரது சாதனைகளும் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. களத்துக்கு வெளியே மெஸ்ஸி, யமால் இருவரும் யுனிசெஃப்-க்கு ஆதரவு அளித்து குழந்தைகளின் நலனுக்காக நல்லெண்ண தூதுவரகளாக இருந்து வருகிறார்கள்.

நோக்கம் (கோல்) என்ன? ஓவ்வொரு குழந்தையும் தங்களது தாகத்தை, பசியை கனவுகளை பூர்த்தியடை வைக்க வேண்டும். எங்கள் அணியில் இவர்களை வைத்துள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. புகைப்பட உதவி: ஜான் மான்ஃபோர்ட். எனக் கூறியுள்ளது.

Summary

More than 18 years ago, a baby named Lamine Yamal and his mom Sheila met Lionel Messi at a UNICEF fundraising photoshoot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.