ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான நடுவர் அறிவிப்பு..! ஸ்லோவோனியா நாட்டிலிருந்து முதல்முறை!

கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான நடுவர் குறித்து...

Referee Slavko Vincic of Slovenia shows a red card to Ecuador's Piero Hincapie (3) during the World Cup round of 32 soccer match between Mexico and Ecuador in Mexico City, Tuesday, June 30, 2026. (AP Photo/Natacha Pisarenko)

ஸ்லாவ்கோ வின்சிச். - படம்: ஏபி

Published On :17 ஜூலை 2026, 4:18 pm IST

கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான நடுவராக ஸ்லோவோனியாவைச் சேர்ந்த நடுவர் ஸ்லாவ்கோ வின்சிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஆர்ஜென்டீனா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மோதுகிறது. ஸ்லோவோனியாவில் இருந்து முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு நடுவராகத் தேர்வாகியுள்ளார்.

ஃபிஃபாவின் நடுவர் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா இதனை அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது ஸ்லோவோனியா நடுவர் கண்ணீர் விடும் காட்சிகள் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன.

முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் ஸ்லாவ்கோ வின்சிச் பிரேசில் - மொராக்கோ, அல்ஜீரியா - ஜோர்டான், மெக்சிகோ - ஈக்குவாடர் ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

களத்தில் எதிரணியுடன் வாயை மூடிப்பேசும் வீரருக்கு ரெட் கார்டு வழங்கப்படும் என்ற விதியின்படி இந்த நடுவர்தான் முதல்முறையாக ரெட் கார்டை வழங்கினார்.

உள்ளூர் போட்டிகளில் 2007 முதல் நடுவராக இருக்கும் வின்சிச் 2010 முதல் ஃபிஃபாவின் நடுவராகவும் இருக்கிறார். 2024 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியிலும் இவர் நடுவராக இருந்திருக்கிறார்.

கடந்த உலகக் கோப்பை 2022ல் அறிமுகமான இவர் சௌதி அரேபியா 2-1 என ஆர்ஜென்டீனாவை வீழ்த்திய போட்டியில் பங்கேற்றிருந்தார். இந்த உலகக் கோப்பையில் ரொனால்டோ ரசிகர்கள் நடுவர்கள் தீர்ப்பினை மிகுதியாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஃபிஃபாவின் நடுவர் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா பேசியிருப்பதாவது:

தங்க நிறத்திலான பட்டையுடன் விளையாடுவது அழகானது. நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். இது அழகானது, மிகவும் சிறந்தது. இது ஸ்லோவோனியா நடுவருக்குப் பொருத்தமானது என்றார்.

ஸ்லாவ்கோ வின்சிச் இது குறித்து கண்ணீர் மல்க, ”முதலில் இது அதிர்ச்சியாகவும் பின்னர் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். உலகக் கோப்பை இறுதியில் பங்கேற்பது மிகவும் நம்பமுடியாத மரியாதைக்குரியது. இளம் நடுவர்களாக தொடங்கும்போது இது அவர்களுக்கு கனவு. என்னை மற்றும் எனது அணியை நினைத்து மிகவும் பெருமைக் கொள்கிறேன் என்றார்.

Summary

Meet Slavko Vincic, referee appointed for FIFA World Cup final: Slovenian has history with both Spain and Argentina

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.