
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு... சொந்த ஊரில் கால்பந்து போட்டியைக் கண்டுகளித்த மெஸ்ஸி!
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பொது வெளியில் வந்த மெஸ்ஸி குறித்து...

சொந்த ஊரில் மெஸ்ஸி. (நடுவில் உலகக் கோப்பையில் அழுத மெஸ்ஸி - படங்கள்: ஏபி, இன்ஸ்டா / டீம் மெஸ்ஸி.
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு லியோனல் மெஸ்ஸி (39 வயது) முதல்முறையாக பொதுவெளியில் வந்துள்ளார். தனது சொந்த ஊரில் நடைபெறும் டிவிஷன் 4 போட்டியைக் காண வந்திருந்தார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா 0-1 என ஸ்பெயின் அணியிடம் தோல்வியுற்றது. இதில் மெஸ்ஸி மட்டுமே இரண்டு வாய்ப்புகளை உருவாக்கினார்.
இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி 8 கோல்கள், 4 அசிஸ்ட் செய்து அசத்தினார். இருப்பினும் அவருக்கு கோல்டன் பால் (தங்கப் பந்து), கோல்டன் பூட் (தங்கக் காலணி) என எந்த விருதும் வழங்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது.
மெஸ்ஸியின் குடும்பத்தினர் லியோன்ஸ் டி ரோசாரியோ எஃப்சி என்ற டிவிஷன் 4 கிளப்பை வைத்துள்ளார்கள். இது அவர்களது ரோசாரியோ ஊரில் இருக்கிறது. இந்த கிளப்பின் போட்டியைப் பார்க்க மெஸ்ஸி சென்றிருந்தார்.
ஆர்ஜென்டீன மக்கள் அவரது வருகையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக ரசித்தனர். ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் மெஸ்ஸி மீண்டும் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
உலகக் கோப்பை விளையாடியதால் இன்னும் சில எம்எல்எஸ் போட்டிகளில் மெஸ்ஸி விளையாடமாட்டர் என இன்டர் மியாமி அணி தெரிவித்திருந்தது.
Ø§ÙØ±ÙØ§Ø¶Ù Ø§ÙØ£Ùثر Ø¥ÙÙØ§ÙÙØ§ ÙÙ Ø§ÙØªØ§Ø±ÙØ®! ð pic.twitter.com/616V9taGVM
— Messi World (@M10GOAT) July 25, 2026
Summary
Messi makes first public appearance in Rosario after World Cup heartbreak
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







