ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிக கோல்கள் அடித்த முதல் மிட்ஃபீல்டர்... உலகக் கோப்பையில் வரலாறு படைத்த ஜூட் பெல்லிங்கம்!

கால்பந்து உலகக் கோப்பையில் ஜூட் பெல்லிங்கம் நிகழ்த்திய சாதனை குறித்து...

England's Jude Bellingham (10) celebrates scoring their sixth goal during the World Cup third-place playoff soccer match between France and England in Miami Gardens, Fla., Saturday, July 18, 2026. (AP Photo/Marta Lavandier)

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஜூட் பெல்லிங்கம். - படம்: ஏபி

Published On :19 ஜூலை 2026, 6:05 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்தவராக ஜூட் பெல்லிங்கம் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒரே உலகக் கோப்பைத் தொடரில் அதிக கோல்கள் (7) அடித்தவராக ஜூட் பெல்லிங்கம் சாதனை படைத்துள்ளார். மேலும், மிட் ஃபீல்டராக அதிக கோல்கள் அடித்து, உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

உலகக் கோப்பையின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கல பதக்கம் வென்றது.

இந்தப் போட்டியில் ஜூட் பெல்லிங்கம் 90+8ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் ஹாரி கேனை (6 கோல்கள்) முந்தி புதிய சாதனை படைத்தார்.

மிட் ஃபீலடராக இருந்து, அதிக கோல்கள் (7) அடித்தவராக உலக சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்காக ஒரு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியல்:

1. ஜூட் பெல்லிங்கம் - 7 கோல்கள் (2026)

2. ஹாரி கேன் - 6 கோல்கள் (2018, 2026)

3. காரி லின்கேர் - 6 கோல்கள் (1986)

Summary

The first midfielder to score the most goals... Jude Bellingham makes history at the World Cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.