கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் கோல்கீப்பர் 519 நிமிஷங்கள் விளையாடி ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளார். தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் க்ளீன் ஷீட் பெற்று வரலாறு படைத்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஆஸ்திரியாவுடன் மோதியது. இதில் 3-0 என அபார வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 2010க்குப் பிறகு முதல்முறையாக நாக் அவுட் போட்டியில் வென்றுள்ளது.
ஸ்பெயின் அணி குரூப் சுற்றில் 3 போட்டிகளில் 0-0, 1-0, 4-0 என்ற கோல்கள் கணக்கில் வென்றது. தற்போது முதல் நாக் அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32விலும் 3-0 என வென்றுள்ளது.
தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் ஒரு கோல்கூட எதிரணிக்கு விட்டுக்கொடும்மால அசத்தியுள்ளது. அந்த அணியின் கோல் கீப்பர் உனாய் சிமோன் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மொத்தமாக உனாய் சிமோன் 519 நிமிஷங்கள் விளையாடி கோல்கள் அடிக்க விடாமல் தடுத்துள்ளார். முன்னதாக, 517 நிமிஷங்கள் கோல் அடிக்காமல் தடுத்த இத்தாலியின் கோல்கீப்பர் வால்டர் ஜெங்கா (1990) முதலிடத்தில் இருந்தார்.
தற்போது, உலக சாதனையில் உனாய் சிமோன் இடம்பெற்றுள்ளார். அடுத்த சுற்றில் போர்ச்சுகல் உடன் ஸ்பெயின் மோதவிருக்கிறது.
Summary
519 minutes, no goals conceded—Unai Simon scripts World Cup history for Spain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

க்ளீன் ஷீட்டில் ஸ்பெயின் உலக சாதனை: 609 நிமிஷங்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்த கோல்கீப்பர்!

ஓயார்ஜபால் 2 கோல்கள்: 2010க்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்ற ஸ்பெயின்!

ஸ்பெயினிடம் தோல்வி: கண்ணீருடன் வெளியேறியது 2 முறை உலகக் கோப்பை வென்ற உருகுவே!

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





