ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்பெயினிடம் தோல்வி: கண்ணீருடன் வெளியேறியது 2 முறை உலகக் கோப்பை வென்ற உருகுவே!

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய உருகுவே அணி குறித்து...

Uruguay goalkeeper Sergio Rochet, left, consoles teammate Mathias Olivera following the World Cup Group H soccer match between Uruguay and Spain in Zapopan, near Guadalajara, Mexico, Friday, June 26, 2026. (AP Photo/Silvia Izquierdo)

தோல்வியால் சக வீரரைத் தேற்றும் உருகுவே கோல்கீப்பர். - படம்: ஏபி

Published On :27 ஜூன் 2026, 1:04 pm IST

லீக் சுற்றில் ஸ்பெயினிடம் தோல்வியுற்றதால், கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து உருகுவே அணி வெளியேறியது. இந்த அணி 2 முறை உலகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலகக் கோப்பையில் லீக் சுற்றுகள் முடிவடையும் தருணத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், மெக்சிகோவில் குவாடலஜாரா அரங்கத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடந்த போட்டியில் ஸ்பெயின் - உருகுவே அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் அலெக்ஸ் பேனா 42ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை வகித்தது.

பின்னர், இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் திணறின. 90+4ஆவது நிமிஷத்தில் உருகுவேயின் அகுஸ்டின் கானோபியோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

குரூப் ஹெச் பிரிவில் பங்கேற்றிருந்த உருகுவே அணி முதலிரண்டு போட்டிகளில் டிரா செய்திருந்தது. இந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் தோல்வியுற்று உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

உருகுவே வீரர்கள் கண்ணீருடன் சென்றது அந்நாட்டு மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணி 1930, 1950 ஆகிய இரண்டு முறை உலகக் கோப்பைகளை வென்றிருந்தது.

இதுவரை வெளியேறிய அணிகளிலேயே அதிக தரவரிசை (19) கொண்ட அணிகளில் உருகுவே முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.

Summary

Spain wins World Cup group, beating Uruguay 1-0 as Muslera's error sends 2-time champion home

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.