அமெரிக்கா - பெல்ஜியம் இடையேயான போட்டியில் 4 - 1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வென்றது.
ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், பெல்ஜியம் - அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி பிலடெல்பியாவில் நடைபெற்றது.
போட்டி தொடங்கியது முதலே பெல்ஜியம் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. அமெரிக்காவின் தடுப்பாட்டத்தையும் மீறி 9-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் லோயிஸ் ஓபெண்டா முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார்.
கெவின் டி ப்ரூய்னின் அபாரமான ஆட்டத்தால் தொடர்ந்து பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்தியது. அமெரிக்க அணி கொடுத்த சிறு இடைவெளிகளை கூட துல்லியமாகப் பயன்படுத்திக் கொண்டனர் பெல்ஜியம் வீரர்கள்.
ஆனால், 31வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. வெறும் இரு நிமிடங்களில் 33-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சார்லஸ் டி கெட்டலேரே 2-வது கோலை அடித்தார்.
இரண்டாம் பாதியின் 57வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் லோயிஸ் ஓபெண்டா மற்றொரு கோலை அடித்து அணியின் கோலை 3 ஆக உயர்த்தினார். ஆட்டத்தின் முடிவில் 90+3 நிமிடங்களில் ரொமேலு லுகாகு இறுதி கோலை அடித்து, பெல்ஜியத்தின் கணக்கை 4-ஆக உயர்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இதன்மூலம், பெல்ஜியம் அணி 4 - 1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
காலிறுதியில் ஸ்பெயின் அணியுடன் பெல்ஜியம் மோதவுள்ளது.
Summary
Belgium won the match against the United States with a score of 4–1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெட் கார்டில் மோசடி செய்தும் தோல்வியுற்ற அமெரிக்கா..! கிண்டல் செய்த பெல்ஜியம்!

85 நிமிஷங்கள் வரை ஆதிக்கம் (2-0) செலுத்திய செனகல்..! கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் (3-2) த்ரில் வெற்றி!

நியூசிலாந்தை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





