பிஃபா உலகக்கோப்பையில் உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் பிஃபா உலகக் கோப்பைத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் முன்னணி அணிகள் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் திடலில் நடைபெற்ற குரூப் கே பிரிவுக்கான லீக் சுற்றின் 47-வது ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்தப் போட்டி தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே நட்சத்திர வீரர் ரொனால்டோ தனது முதல் கோலை அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை பெற வைத்தார்.
மென்டிஸ் 17-வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட அதனைத்தொடர்ந்து 39-வது நிமிடத்தில் தன்னுடைய கோலை போட்டார் ரொனால்டோ. இதனால், போர்ச்சுகல் அணி முதல் பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நெமடோவ் சுயகோல் போட போர்ச்சுகல் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற, 87-வது நிமிடத்தில் ரஃபேல் லியோ ஒரு கோல் போட ஆட்டம் நேர முடிவில், போர்ச்சுகல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
போர்ச்சுகல் அணி காங்கோ அணிக்கு எதிரான போட்டி சமனில் முடிந்திருந்த நிலையில், நடப்பு பிஃபா தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது போர்ச்சுகல்.
Summary
Cristiano Ronaldo has spent 23 years turning doubt into fuel, and Houston offered another chapter in that story. Written off after DR Congo, the Portugal captain responded with a brace, a record and a reminder that criticism remains his favourite opponent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிகரிப்பால் இரு மடங்கு உயர்வு... பிஃபா உலகக் கோப்பையின் விலை இவ்வளவா?
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!

2014-க்குப் பிறகு முதல் வெற்றி பெற்ற அல்ஜீரியா! ஜோர்டானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது!

பொதுநலமாக சிந்திக்க வேண்டும்; சுயநலமாக அல்ல..! ரொனால்டோவை விமர்சித்த முன்னாள் வீரர்!
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu



