தொடர்ந்து 6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் பிஃபா உலகக் கோப்பைத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் முன்னணி அணிகள் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்காவின் ஹூஸ்டன் திடலில் நடைபெற்ற குரூப் கே பிரிவுக்கான லீக் சுற்றின் 47-வது ஆட்டத்தில் அறிமுக அணியான உஸ்பெகிஸ்தான் - போர்ச்சுகல் அணிகள் மோதின.
இந்தப் போட்டி தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே நட்சத்திர வீரர் ரொனால்டோ தனது முதல் கோலை அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை பெற வைத்தார்.
மென்டிஸ் 17-வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட அதனைத்தொடர்ந்து 39-வது நிமிடத்தில் தன்னுடைய கோலை போட்டார் ரொனால்டோ. இதனால், போர்ச்சுகல் அணி முதல் பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நெமடோவ் சுயகோல் போட போர்ச்சுகல் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற, 87-வது நிமிடத்தில் ரஃபேல் லியோ ஒரு கோல் போட ஆட்டம் நேர முடிவில், போர்ச்சுகல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் குறைந்தது ஒரு கோலாவது அடித்திருக்கும் ரொனால்டோ இந்தத் தொடரிலும் தனது கோல் கணக்கைத் தொடங்கியுள்ளார். இதனால், 6 உலகக் கோப்பை போட்டிகளில் கோலடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனைக்கு 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
இதற்கு அடுத்த இடத்தில் உள்ள மெஸ்சி 5 உலகக் கோப்பை சீசனில் கோல் அடித்துள்ளார். பிஃபா உலகக் கோப்பை தொடரில் ரொனால்டோவின் 9-வது கோலாக இந்த கோல் பதிவானது.
Summary
Cristiano Ronaldo made history Tuesday by becoming the first player to score in six different World Cups, finding the net in Portugal's 5-0 win over Uzbekistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!

2ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த இஸ்மாயில் சைபாரி..! மொராக்கோ த்ரில் வெற்றி!

பொதுநலமாக சிந்திக்க வேண்டும்; சுயநலமாக அல்ல..! ரொனால்டோவை விமர்சித்த முன்னாள் வீரர்!

சோபிக்காத ரொனால்டோ: போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி அளித்த காங்கோ!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




