ஃபிஃபா உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று ஆட்டத்தில் குரோஷியாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தி, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும், டொராண்டோ திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் தனது முதல் கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஃபிஃபா உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் கோல் அடித்த மிக வயதான வீரர் (41 வயது 147 நாள்கள்) என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றுள்ளார்.
ஆட்டத்தின் கடைசி விநாடியில் குரோஷியா அணி அடித்த கோல், விஏஆர் பரிசோதனைக்குப் பிறகு, ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த குரோஷியா ரசிகர்கள், திடலுக்குள் குப்பைகளை வீசி எறிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
குரோஷியாவை வென்ற போர்ச்சுகல் அணி, அடுத்த சுற்றில் (ஜூலை 6) பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது.
Summary
FIFA World Cup 2026: Cristiano Ronaldo becomes oldest player to score in World Cup knockout match
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

72 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றி: அல்ஜீரியாவை வென்று ஸ்விட்சர்லாந்து சாதனை!

ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல்கள்..! டிராவில் முடித்த 2 அணிகளுமே நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வு!
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!

6/32: உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 6 அணிகள்!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




