உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்குத் தகுதி பெறும் சுற்றில் ஸ்பெயின் - போர்ச்சுகல் இடையேயான போட்டி டல்லாஸ் ஏடி&டி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
கால்பந்து உலகில் முக்கிய அணிகளாகப் பார்க்கப்படும் இரு அணிகளின் போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகத்தை கூட்டிய ஸ்பெயின் போர்ச்சுகலின் தடுப்பாட்டத்தை மீறி பந்தை தன்வசம் வைத்திருந்தது. போர்ச்சுகல் அணி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி கோல் அடிக்க முயன்றது. ஆனால், இரு அணிகளின் கோல் முயற்சிகளும் தொடர்ந்து தடுக்கப்பட்டன.
இரண்டாம் பாதியில் போட்டி ஒரு சதுரங்க ஆட்டத்தைப் போல மாறியது. போர்ச்சுகல் அணியின் ரூபன் டியாஸ் மற்றும் ரெனாடோ வெய்கா ஆகியோர் பந்தினை அபாரமாகத் தடுத்து, ஸ்பெயின் அணியின் சிக்கலான பாஸ்களை தொடர்ந்து மறித்தனர்.
அதேபோல, போர்ச்சுகல் வீரரான நூனோ மெண்டஸ் ஸ்பெயினின் லமின் யமாலுக்கு நிகராகச் செயல்பட்டு அவருடைய தாக்கத்தைக் கட்டுப்படுத்தினார். போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ தீவிரமாக முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை.
90 நிமிடங்களுக்கு ஆட்டம் மிகவும் தீவிரமான பரபரப்புடன், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமலேயே சென்றது. ஸ்பெயின் களத்தின் நடுவில் தனது கட்டுப்பாட்டில் பந்தை அதிக நேரம் வைத்திருந்தால், போர்ச்சுகல் தொடர்ந்து சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு செல்லும் என்று அனைவரும் நினைத்தபோது, இறுதிக்கட்டத்தில் ஸ்பெயினுக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. போர்ச்சுகல் வீரர்கள் நடுவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு சுதாரிப்பதற்குள், ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் கொடுத்த பாஸை மாற்று வீரராகக் களமிறங்கிய மைகெல் மெரினோ நிதானமாக கோல் அடித்தார். கடைசி நிமிடங்களில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று போர்ச்சுகலை வீழ்த்தியது.
உலகின் சிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு இந்தத் தோல்வியால் தகர்ந்தது. 41 வயதான அவரது கடைசி உலகக்கோப்பை தொடர் இதுவே. உலகம் முழுவதுமுள்ள ரொனால்டோ ரசிகர்கள் இந்தப் போட்டியின் முடிவால் வருத்தமடைந்துள்ளனர்.
ஸ்பெயின் அணி இந்தத் தொடரில் இதுவரை எதிரணியினரை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் வென்று உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் பெல்ஜியம் அணியுடன் மோதவுள்ளது.
Spain advanced to the quarter-finals of the football World Cup by defeating Portugal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரோஷியாவின் கோல் திருடப்பட்டதா? பந்து தலைமுடியில் பட்டதாக விஏஆர் சர்ச்சையான தீர்ப்பு!

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெளியேறிய தென் கொரியா: மன்னிப்புக் கேட்ட அதிபர்!









