ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கலப்பு இரட்டையர் படு தோல்வி!

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியுற்ற கலப்பு இரட்டையர் குறித்து...

New Delhi: India�s Dhruv Kapila, right, and Tanisha Crasto after losing against China�s Guo Xin Wa, left back, and Chen Fang Hui in the mixed doubles badminton match during the BWF World Championships, at IGI Stadium in New Delhi, Thursday, Aug. 20, 2026. (PTI Photo/Karma Bhutia)(PTI08_20_2026_000237A)

தனிஷா க்ராஸ்டோ மற்றும் துருவ் கபிலா - படம்: பிடிஐ

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:38 pm IST

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோகலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இந்திய இணை தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்கள்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா தனது சொந்த மண்ணில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

இரட்டையர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பங்கேற்ற இந்திய இணை துருவ் கபிலா மற்றும் தனிஷா க்ராஸ்டோ சீன கலப்பு இரட்டையர் சென் ஃபங்குய் மற்றும் சின்வா உடன் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் இந்திய இணை 16-21, 5-21 என படுதோல்வி அடைந்தனர். உலகின் நம்.6 தரவரிசையில் இருந்த சீன இணையிடம்தான் இந்தியர்கள் தோல்வியுற்றுள்ளார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த உலக சாம்பியன்ஷிப்பில் அர்ஜுனா விருது வென்ற இந்திய மகளிர் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை காலிறுதி சுற்றுக்குத் தகுதிபெற்று அசத்தியுள்ளார்கள்.

ஆடவர் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசிய வீரர்களிடம் இன்று மாலை மோதுகிறார்கள். ஒற்றையர் ஆடவர், மகளிர் பிரிவில் ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடுகிறார்கள்.

Summary

India's mixed doubles pair suffers a crushing defeat in the pre-quarterfinals!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.