ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இலங்கை வீரரை 26 நிமிஷங்களில் வீழ்த்திய ஆயுஷ் ஷெட்டி..! மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது சுற்றில் வென்ற இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி குறித்து...

Ayush Shetty

ஆயுஷ் ஷெட்டி - படம்: எக்ஸ் / BAI_Media

Published On :19 ஆகஸ்ட் 2026, 7:07 pm IST

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி அதிரடியாக வெறுமனே 26 நிமிஷங்களில் வென்று அசத்தியுள்ளார்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

முதல் போட்டியில் ஆயுஷ் ஷெட்டி உலகின் நம்.1 வீரரை வீழ்த்தி பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தார். தற்போது இரண்டாவது சுற்றில் இலங்கை வீரர் துமிந்து அபேவிக்ரம உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் ஆயுஷ் ஷெட்டி நேர் கேம்களில் வென்று அசத்தினார். முதல் கேமில் 21-8 எனவும் இரண்டாவது கேமில் 21-10 எனவும் அசத்தல் வெற்றி பெற்றார்.

ஆயுஷ் ஷெட்டி தனது ஆதிக்கத்தினால் முதல் கேமில் 11 நிமிஷங்கள், இரண்டாவது கேமில் 15 நிமிஷங்களில் போட்டியை முடித்தார்.

இந்த உலக சாம்பியன்ஷிப்பில் ஒற்றையர் பிரிவில் முதல் இந்திய வீரராக மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக உனாடி ஹூடா, லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றில் தோல்வியுற்று வெளியேறினார்கள்.

Summary

Ayush Shetty defeats Sri Lankan player in just 26 minutes... Advances to the third round!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.