
பார்சிலோனாவின் முதன்மை கேப்டனாக ரபீனியா..! முதல் கோல், முதல் வெற்றி!
பார்சிலோனா அணியின் புதிய கேப்டன் ரபீனியா ஆட்ட நாயகன் விருது வென்றது குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரபீனியா. - படம்: ஏபி
பார்சிலோனா கால்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரபீனியா முதல் கோல் அடித்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
நட்பு ரீதியான கிளப் போட்டியில் பார்சிலோனா அணியும் அல் அஹ்லி அணியும் இரவு மோதின. இந்தப் போட்டியில் 2-1 என பார்சிலோனா அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அணியின் கேப்டன் ரபீனியா 45ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார். இந்த 2026-27 சீசன் முழுவதும் இவர் முதன்மையான கேப்டனாக செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரஃபீனியா பார்சிலோனா அணியில் ஃபார்வேடு வீரராக விளையாடி வருகிறார். நட்சத்திர வீரராக இருக்கும் இவர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
பார்சிலோனா அணியின் கேப்டன்கள் வரிசைப் பட்டியல்
1. ரபீனியா
2. ஃபெரெங் டீ ஜோங்
3. பெத்ரி
4. கவி
5. எரிக் கார்சியா
Always Raphinha. pic.twitter.com/lkn22YnnWk
— FC Barcelona (@FCBarcelona) August 20, 2026
Summary
Raphinha set to be named Barcelona captain for 2026-27 season and his first goal in friendly match
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







