ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த்: 65 தங்கம் உள்பட 158 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!

காமன்வெல்த் தொடரில் பிற நாடுகள் நெருங்க முடியாத அளவுக்கு, ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா குறித்து...

Members of the Australian team that participated in the Commonwealth Games.

காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியினர். - படங்கள்: எக்ஸ் / CommGamesAUS

Published On :2 ஆகஸ்ட் 2026, 11:53 am IST

காமன்வெல்த் தொடரில் ஆஸ்திரேலியா 65 தங்கம் உள்பட 158 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா சார்பில் 257 பேர் பங்கேற்றார்கள்.

விளையாட்டுக்கு முக்கியத்தும் அளிக்கும் நாடாக ஆஸ்திரேலியா இருந்துவருகிறது. இந்த முறை 151 பேர் முதல்முறையாக இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த காமன்வெல்த் தொடரில் நீச்சல் பிரிவில் மட்டுமே 37 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 76 பதக்கங்கள் வென்றுள்ளன. இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 39 என்பதும் கவனிக்கத் தக்கது.

இரண்டாவது அதிகபட்சமாக, தடகளத்தில் 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் வென்று 34 பதக்கங்கள் வென்றுள்ளன. மொத்தமாக, இதுவரை ஆஸ்திரேலிய அணி 65 தங்கம், 41 வெள்ளி, 52 வெண்கலம் உடன் 158 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முன்னதாக, 2022 காமன்வெல்த் தொடரிலும் ஆஸ்திரேலியா 179 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்த முறையும் ஆஸ்திரேலியாதான் முதலிடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் 2026 பதக்க தரவரிசை

1. ஆஸ்திரேலியா - 158 பதக்கங்கள் (65 தங்கம்)

2. இங்கிலாந்து - 102 பதக்கங்கள் (26 தங்கம்)

3. கனடா - 59 பதக்கங்கள் (18 தங்கம்)

4. இந்தியா - 39 பதக்கங்கள் (13 தங்கம்)

5. ஸ்காட்லாந்து - 38 பதக்கங்கள் (13 தங்கம்)

Summary

Commonwealth: Australia dominates the top spot with 158 medals, including 65 golds!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.