ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த்: தங்க வேட்டையில் இந்தியா! மகளிர் குத்துச்சண்டையில் 5-வது தங்கம்!

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

தங்கம் வென்ற அருந்ததி சௌத்ரி. - PTI

Published On :1 ஆகஸ்ட் 2026, 10:55 pm IST

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இன்று தங்க வேட்டையில் இறங்கியுள்ளது. ஒரே நாளில் 6 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ள நிலையில், அதில் 5 தங்கப் பதக்கங்களை மகளிர் குத்துச்சண்டையில் மட்டும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டைப் போட்டிகளில் வெவ்வேறு கிலோ பிரிவில் சாக்ஷி சௌத்ரி(51 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின்(57 கிலோ) எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இரவு நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 70 கிலோ பிரிவில் இந்தியாவின் அருந்ததி சௌத்ரி இங்கிலாந்தின் சாண்டெல் ரீட்டை எதிர்கொண்டார்.

தனது அபார ஆட்டத்தின் மூலம், ஒவ்வொரு சுற்றிலும் ஆதிக்கம் செலுத்திய அருந்ததி 5-0 என்ற கணக்கில் தங்கம் வென்று அசத்தினார்.

இதன்மூலம், மொத்தமாக 11 வது தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது.

இத்துடன் காமன்வெல்த்தில் தங்கம் 11, வெள்ளி 15, வெண்கலம் 8 வென்று மொத்தம் 34 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

Summary

Commonwealth: India on a gold hunt! 5th gold in women's boxing!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.