திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் பெஞ்சமின் செஸ்கோ. - படம்: ஏபி

Updated On :28 ஏப்ரல் 2026, 9:57 pm IST

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாக 99% உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீதமிருக்கும் அனைத்து போட்டிகளில் தோல்வியுற்றால் மட்டுமே இந்த அணி தேர்வாகம் செல்லும்; ஒரு டிரா பெற்றால்கூட போதுமனதாக இருக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் அதிக முறை கோப்பை வென்ற மான்செஸ்டர் யுனைடெட் சமீப காலமாக கோப்பை வெல்லாமலும் சாம்பியன்ஸ் லீக்கிற்கு தேர்வாகமலும் இருக்கிறது.

தற்போது, மான்செஸ்டர் யுனைடெட் வெற்றிகளைக் குவித்து வருகிறது. பிரீமியர் லீக்கில் 34 போட்டிகளில் 61 புள்ளிகளுடன் இருக்கிறது.

ப்ரென்ட்ஃபோர்ட் உடனான இன்றைய போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வென்றது. இந்தப் போட்டியில் காசிமரோ 11ஆவது நிமிஷத்திலும் பெஞ்சமின் செஸ்கோ 43ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்கள்.

தற்போது, புள்ளிப் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் அணி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இன்னும் 4 போட்டிகள் மீதமிருக்கின்றன.

பிரீமியர் லீக்கில் இருந்து டாப் 5 அணிகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்துப் போட்டியான சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகும் என்பது விதிமுறையாக இருக்கிறது.

இந்தப் பட்டியலில் 6,7ஆவது இடத்தில் இருக்கும் பிரைடன், போர்ன்மவுத் அணிகளின் தோல்விகள் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தேர்வை உறுதிப்படுத்தும். மாறாக, யுனைடெட் அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்று, பிரைடன் அனைத்திலும் வென்றால் மட்டுமே இந்தத் தேர்வில் மாற்றம் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.

பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்

1. ஆர்செனல் - 73 புள்ளிகள் (34 போட்டிகளில்)

2. மான்செஸ்டர் சிட்டி - 70 புள்ளிகள் (33 போட்டிகளில்)

3. மான்செஸ்டர் யுனைடெட் - 61 புள்ளிகள் (34 போட்டிகளில்)

4. லிவர்பூல் - 58 புள்ளிகள் (34 போட்டிகளில்)

5. ஆஸ்டன் வில்லா - 58 புள்ளிகள் (34 போட்டிகளில்)

6. பிரைடன் - 50 புள்ளிகள் (34 போட்டிகளில்)

7. போர்ன்மவுத் - 49 புள்ளிகள் (34 போட்டிகளில்)

Summary

Manchester United is 99% certain to qualify for the Champions League!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.