திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் வென்ற பிஎஸ்ஜி அணி குறித்து...

News image

சாம்பியன்ஸ் லீக்கை வென்ற மகிழ்ச்சியில் பிஎஸ்ஜி அணியினர். - படம்: ஏபி

Updated On :31 மே 2026, 10:50 am IST

பிரீம்யர் லீக்கின் சாம்பியன் ஆர்செனல் அணியை பிஎஸ்ஜி அணி பெனால்டி ஷுட் அவுட்டில் 4-3 என வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக்கை பிஎஸ்ஜி அணி வென்றது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5ஆவது நிமிஷத்தில் ஆர்செனலின் கை ஹைவெர்ட்ஸ் கோல் அடித்தார்.

முதல் பாதியில் ஆர்செனல் 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், போட்டியின் 64ஆவது நிமிஷத்தில் பெனால்டி வாய்ப்பில் டெம்பெலே கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர், ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது.

பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. ஆர்செனல் சார்பில் எபிரேஸி, கேப்ரியல் மகல்ஹேஸ் கோல் அடிக்க தவறினார்கள். பிஎஸ்ஜி சார்பில் நுனோ மெண்டிஸ் கோல் அடிக்க தவறினார்.

இந்தப் போட்டியில் 72 சதவிகிதம் பந்தை தன்வசம் வைத்திருந்த பிஎஸ்ஜி அணி இலக்கை நோக்கி 4 முறை கோல் அடிக்க முயன்றது. டிஃபென்ஸில் பலம்வாய்ந்த ஆர்செனல் அணி சிறப்பாகவே தடுத்து வந்தது.

சாம்பியன்ஸ் லீக்கின் மன்னன் ரியல் மாட்ரிட் அணிக்குப் பிறகு பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் மூன்றாவது முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ளார்.

முன்னதாக 2016-18 சீசனில் தொடர்ச்சியாக மூன்று முறை ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றிருந்தது.

Summary

PSG wins back-to-back Champions League titles after shootout victory against Arsenal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.