திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டியின் அபார வெற்றி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் மான்செஸ்டர் சிட்டி வீரர். - படம்: ஏபி

Updated On :14 மே 2026, 5:14 pm IST

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி கிறிஸ்டல் பேலஸ் அணிக்கு எதிராக 3-0 என அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியினால், பிரீமியர் லீக் கொப்பையை வெல்லும் ஆர்செனலின் கனவு தள்ளிப்போகியுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் யார் முன்னிலைப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

பிரீமியர் லீக்கில் யார் கோப்பை வெல்லுவார்கள் என்ற போட்டி இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் தலா 38 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது 36 போட்டிகளில் விளையாடியிருக்கின்றன.

இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி கிறிஸ்டல் பேலஸை 3-0 என வீழ்த்தி கோப்பைக்கான கனவை தக்கவைத்துள்ளது.

ஆர்செனல் அணி 79 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, மான்செஸ்டர் சிட்டி 77 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆர்செனல் அணி அடுத்த 2 போட்டிகளில் மே.19. 24ஆம் தேதிகளில் பர்ன்லி, கிறிஸ்டல் பேலஸ் அணிகளுடன் மோதவிருக்கிறது.

மான்செஸ்டர் சிட்டி அணி போர்ன்மவுத், ஆஸ்டன் வில்லா அணிகளுடன் மே.20, 24ஆம் தேதிகளில் விளையாடவிருக்கின்றன.

பிரீமியர் லீக்கில் பலமுறை இரண்டாமிடம் பிடித்த சாபம் ஆர்செனல் அணிக்கு இருக்கிறது. இந்த சீசனிலும் அது தொடருமா அல்லது முறியடிக்கப்படுமா சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Manchester City keeps pressure on Arsenal with 3-0 win against Crystal Palace

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.