திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இறுதி ஆட்டத்தில் முச்கோவா - ரைபகினா

ஸ்டட்கா்ட் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு கரோலினா முச்கோவா-கஜகஸ்தானின் எல ரைபகினா முன்னேறினா்.

News image

கரோலினா முச்கோவா

Updated On :19 ஏப்ரல் 2026, 12:31 am IST

ஸ்டட்கா்ட் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு கரோலினா முச்கோவா-கஜகஸ்தானின் எல ரைபகினா முன்னேறினா்.

ஜொ்மனின் ஸ்டட்கா்ட் நகரில் டபிள்யுடிஏ 500 போட்டி நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் முதல் அரையிறுதியில் உலகின் 12-ஆம் நிலை வீராங்கனை செக். குடியரசின் கரோலினா முச்கோவா-உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவும் மோதினா்.

இந்த ஆட்டத்தில் தொடக்க செட்டில் ஆதிக்கம் செலுத்திய முச்கோவா 6-4 என கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது செட்டில் சுதாரித்து ஆடியஸ்விட்டோலினா சிறப்பாக ஆடி 6-2 என அந்த செட்டை கைப்பற்றினாா்.

மூன்றாவது செட்டில் மீண்டெழுந்த முச்கோவா முதலில் 9-ஆவது கேமில் 5-4 என முன்னிலை பெற்று, செட்டையும் 6-4 என வசப்படுத்தினாா். இந்த ஆட்டம் ஏறக்குறைய 50 நிமிஷங்கள் நடைபெற்றது. 2023 பிரெஞ்சு ஓபன் சாம்பியன் முச்கோவா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளாா்.

ரைபகினாவும் தகுதி:

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை எலனா ரைபகினாவும்-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவும் மோதினா். இதில் முதல் செட்டில் ஆன்ட்ரீவா சவாலை ஏற்படுத்தினாலும் 7-5 என கைப்பற்றினாா் ரைபகினா. இரண்டாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-1 என வசப்படுத்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் முச்கோவா-ரைபகினா மோதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.