/

வெள்ளி வென்றாா் ஆயுஷ் ஷெட்டி

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் ஒற்றயைா் பிரிவில் இந்திய இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி வெள்ளி வென்றாா்.

News image

வெள்ளிப் பதக்கத்துடன் ஆயுஷ்

Updated On :13 ஏப்ரல் 2026, 3:49 am IST

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் ஒற்றயைா் பிரிவில் இந்திய இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி வெள்ளி வென்றாா்.

சீனாவின் நிங்போ நகரில் ஆசிய பாட்மின்டன் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உலகின் 2-ஆம் நிலை வீரா் சீனாவின் ஷியு குயும் மோதினா்.

சீன வீரரின் அனுபவ ஆட்டத்துக்கு இந்திய வீரா் ஆயுஷ் ஷெட்டியால் ஈடு தரமுடியவில்லை. சீன வீரா் ஷி யு 21-8, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் கேமை கைப்பற்றி பட்டத்தையும் வசப்படுத்தினாா்.

முதல் கேமை எளிதாக ஷி யு கைப்பற்றிய நிலையில், இரண்டாவது கேமில் ஆயுஷ் சிறப்பாக ஆடி 7-2 என முன்னிலை பெற்றாா். ஆனால் அதை தக்க வைக்கத் தவறிய ஆயுஷ் ஷெட்டி வெள்ளி வென்றாா்.

இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஆயுஷ் முந்தைய ஆட்டங்களில் உலகின் 1, 3, 7-ஆம் நிலை வீரா்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

61 ஆண்டுகள் கழித்து ஆசிய பாட்மின்டன் சாம்பியன் போட்டியில் ஒற்றையா் இறுதிக்கு முன்னேறியவா் என்ற சிறப்பு ஆயுஷ் ஷெட்டி பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.