காமன்வெல்த் செஸ் போட்டியில் இந்தியாவின் ஜிஎம் இனியன் 2 தங்கம் வென்றாா் . மேலும் தமிழகத்தைச் சோ்ந்த சிறுவா், சிறுமியா் 5 பதக்கங்களை வென்றனா்.
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டி மே 16 முதல் 26 வரை இலங்கையில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மோரீஷியஸ், மாலத்தீவு, பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, மலேசியா, சிங்கப்பூா், ஸ்காட்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட 14 காமன்வெல்த் நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் இதில் பங்கேற்றனா். பிளிட்ஸ், ரேபிட் மற்றும் கிளாசிக்கல் என
மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியின் ஓபன் பிரிவில் 96 வீரா்கள் கலந்து கொண்டனா்.
இந்தியாவைச் சோ்ந்த கிராண்ட்மாஸ்டா் இனியன் பா., ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் தலா 7 ஆட்டங்களில் 6.5 புள்ளிகள் பெற்று இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றாா்.
ரேபிட் பிரிவில் ஸ்ரீஹரி வெள்ளிப் பதக்கத்தையும், மித்ரபா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனா். பிளிட்ஸ் பிரிவில் ரோஹித் கிருஷ்ணா வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா். கிளாசிக்கல் பிரிவில் எ மித்ரபா குஹா சாம்பியன் பட்டம் வென்றாா். ரணிந்து லியானகே வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனா்.
சிறுவா், சிறுமியா்
போட்டியின் ரேபிட் பிரிவில், தமிழக வீரா்கள் ஐந்து பதக்கங்களை வென்றனா். இதில் தமிழ் அமுதன் எஸ். மற்றும் மேஹா அரின் ஏ. தங்களது பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றனா். எட்டு வயதிலேயே 2,000 எலோ மதிப்பெண் என்ற முக்கிய மைல்கல்லை கடந்த வீரா் தமிழ் அமுதன் யு-10 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். அதேபோல், யு-12 சிறுமியா் பிரிவில் மேஹா அரின் ஏ. தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா்.
மேலும், கடுமையான போட்டி நிலவிய யு-18 ஓபன் பிரிவில் நந்தீஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். மூத்த இளைஞா் பிரிவுகளில், யு-20 சிறுமியா் பிரிவில் மரியம் பாத்திமா வெள்ளிப் பதக்கமும், யு-20 ஓபன் பிரிவில் கிரிதன் பொக்கரப்பு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யு-23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 11 தங்கம் உள்பட 27 பதக்கம்
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!

காமன்வெல்த் செஸ் கூட்டமைப்பின் தலைவராக பரத் சிங் சௌஹான் மீண்டும் தோ்வு

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய சிறுமியா் அபாரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



