ஸ்பெயின் உள்ள கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணி அதன் தலைமைப் பயிற்சியாளர் ஹன்சி பிளிக் தலைமையில் 107 போட்டிகளில் 300 கோல்களை நிறைவு செய்துள்ளது.
ஜெர்மனைச் சேர்ந்த பயிற்சியாளர் ஹன்சி ஃபிளிக் கடந்த 2024, மே 29ஆம் தேதி பார்சிலோனோவில் இணைந்தார். இவரது ஒப்பந்தம் ஜூன் 2027 வரை இருக்கிறது.
அனைத்து போட்டிகளிலும் அசத்தும் பார்சிலோனா
கடந்த சீசனில் ஹன்சி ஃபிளிக் தலைமையில் பார்சிலோனா அணி லா லிகா, ஸ்பானிஷ் கோப்பை, ஸ்பானிஷ் சூப்பர் கோப்பைகளை வென்று அசத்தியது.
தற்போதைய சீசனில் ஸ்பானிஷ் கோப்பையை தவறவிட்ட பார்சிலோனா ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை வென்றுள்ளது. லா லிகாவில் முதலிடமும் சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதியிலும் இருக்கிறது.
ஹன்சி ப்ளிக் தலைமையில் பார்சிலோனா அணி ஒரு போட்டிக்கு சராசரியாக 2.81 அளவில் கோல் அடிக்கிறது. நள்ளிரவு நடந்த போட்டியில் மார்கஸ் ராஷ்போர்டு 300ஆவது கோலை பதிவு செய்தார். அடுத்ததாக, லெவண்டாவ்ஸ்கி 301ஆவது கோலை அடித்தார்.
முந்தைய சீசனில் பார்சிலோனா அணி 174 கோல்களை அடித்தது. கிளப் வரலாற்றிலேயே இது 3ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் 68 போட்டிகளில் 182 கோல்கள் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2011–12 : 190 கோல்கள் (பெப் கார்டியாலோ தலைமையில்)
2025-26 : 182* கோல்கள் (ஹன்சி பிளிக் தலைமையில்)
2014–15 : 175 கோல்கள் (லூயூஸ் என்ரிக் தலைமையில்)
2024–25 : 174 கோல்கள் (ஹன்சி பிளிக் தலைமையில்)
2015–16 : 173 கோல்கள் (லூயூஸ் என்ரிக் தலைமையில்)
2016–17 : 171 கோல்கள் (லூயூஸ் என்ரிக் தலைமையில்)
Summary
fc barcelona 300 goals in the Hansi Flick era
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருடப்பட்ட வெற்றி..! நடுவர்களை விமர்சித்த பார்சிலோனா வீரர்!

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பற்றி எறிந்த கேம்ப் நௌ திடல்..! பார்சிலோனா அபார வெற்றியுடன் (7-2) காலிறுதிக்கு முன்னேற்றம்!

பார்சிலோனாவுடன் பயிற்சியாளர் பணியைக் கைவிடும் ஹன்சி ஃபிளிக்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



