மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

2ஆவது டிவிஷன் அணியிடம் காலிறுதியில் தோற்ற ஆர்செனல்..! இந்த சீசனில் 2ஆவது கோப்பை இழப்பு!

எப்ஃஏ கோப்பை காலிறுதியில் தோல்வியுற்ற ஆர்செனல் அணி குறித்து...

News image

சோகத்தில் வெளியேறிய ரசிகர்கள். - படம்: ஏபி

Updated On :5 ஏப்ரல் 2026, 10:14 am

இங்கிலாந்தில் நடைபெறும் எப்ஃஏ கோப்பை காலிறுதியில் பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் ஆர்செனல் அணி இரண்டாம் டிவிஷன் அணியான் சௌத்தாம்டன் உடன் 1-2 என தோல்வியுற்றது.

பிரீமியர் லீக்கில் இருக்கும் மற்ற அணிகளின் ரசிகர்கள் ஆர்செனல் ரசிகர்களை சமூக வலைதளத்தில் கேலி செய்வதால், அவர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

எப்ஃஏ கோப்பை காலிறுதியில் சௌத்தாம்டன் அணியினர் 35, 85ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ஆர்செனல் அணியில் ஆறுதலாக 68ஆவது நிமிஷத்தில் விக்டர் கியோகெரெஸ் கோல் அடித்தார்.

ஆர்செனல் அணியில் நட்சத்திர வீரர்கள் விளையாடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. முன்னதாக, கராபோ கோப்பையில் 2-0 என இறுதிப் போட்டியில் தோற்றிருந்தது. இதன்ம்மூலம் இந்த சீசனில் 2 கோப்பைகள் ஆர்செனல் கையை விட்டு நழுவிச் சென்றுள்ளது.

பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் ஆர்செனல் சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதியில் இருக்கிறது. இந்த இரண்டிலாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது

Summary

Arsenal suffer a humiliating defeat in the FA Cup and lose a key player in the title race.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.