போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!

பிரீமியர் லீக்கில் தனது சாபத்தை முறியடிக்குமா ஆர்செனல் கால்பந்து அணி...

News image

ஆர்செனல் கால்பந்து அணியினர். - படம்: ஆர்செனல் எஃப்சி

Updated On :18 ஏப்ரல் 2026, 5:19 pm IST

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் ஆர்செனல் அணி இந்த சீசனில் கோப்பை வெல்லும் வாய்ப்பிருக்கிறது. இருந்தும் தவறவிடுவதற்கான வாய்ப்பும் இருப்பதால், நாளை (ஏப்.19) நடைபெறும் போட்டி முக்கியனதாக இருக்கிறது.

ஆர்செனல் அணி 70 புள்ளிகளுடன் முதலிடத்திலும் மான்செஸ்டர் சிட்டி 64 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. பிரீமியர் லீக்கில் ஆர்செனல் கோப்பை வென்று 22 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சீசனிலாவது அந்தச் சாபம் நீங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மான்செஸ்டர் சிட்டி தனது சொந்த மண்ணில் ஆர்செனலை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமானது. ஆர்செனல் அணி வெற்றி பெறாவிட்டாலும் சமனிலாவது ஆட்டத்தை முடிக்க வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறது.

இதுவரையிலான பிரீமியர் லீக் வரலாற்றில் ஆர்செனல் அணிதான் அதிகமுறை (9) இரண்டாமிடம் பிடித்துள்ளது. கடந்த சீசனிலும் இரண்டாமிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஆர்செனல் அணி 1997–98, 2001–02, 2003–04 சீசன்களில் பிரீமியர் லீக் கோப்பையை வென்றிருந்தது. அதற்குப் பிறகு ஒருமுறைக் கூட கோப்பை வெல்லாமலே இருக்கிறது. இந்த சீசனிலாவது இரண்டாமிடம் என்ற சாபம் நீங்குமா என ஆர்செனல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆர்செனல் தவறவிட்ட பிரீமியர் லீக் சீசன்கள் (அதாவது இரண்டாமிடம் பெற்ற சீசன்கள்)!

1998–99 சீசனில் 1 புள்ளியில் பின் தங்கியது

1999–00 சீசனில் 18 புள்ளிகள் பின் தங்கியது.

2000–01 சீசனில் 10 புள்ளிகள் பின் தங்கியது.

2002–03 சீசனில் 5 புள்ளிகள் பின் தங்கியது.

2004–05 சீசனில் 12 புள்ளிகள் பின் தங்கியது.

2015–16 சீசனில் 10 புள்ளிகள் பின் தங்கியது.

2022–23 சீசனில் 5 புள்ளிகள் பின் தங்கியது.

2023–24 சீசனில் 2 புள்ளிகள் பின் தங்கியது.

2024–25 சீசனில் 10 புள்ளிகள் பின் தங்கியது.

Summary

Arsenal can beat Manchester City and broke tha cursed of runner, won the Premier League title.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.