ஆர்செனல் கால்பந்து அணியின் கோல் கீப்பர் டெவிட் ராயா (30 வயது) மூன்றாவது முறையாக கோல்டன் க்ளோவ் (தங்கக் கையுறை) விருது வென்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கக் கையுறை விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த டேவிட் ராயா ஆர்செனல் அணிக்கு கோல் கீப்பராக 2023 முதல் விளையாடி வருகிறார். இந்த சீசனில் ஆர்செனல் அணி 76 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த சீசனில் டேவிட் ராயா 17 க்ளீன் ஷீட்டைப் பெற்றிருந்தார். அதாவது ஒரு ஆட்டத்தில் எதிரணிக்கு ஒரு கோல்கூட விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக செயல்படும் கோல் கீப்பருக்கு இந்தப் பெருமை சென்றுசேரும். ஆர்செனல் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறார்.
இரண்டாம் இடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் டோனரும்மா இருக்கிறார். மீதமிருக்கும் 4 போட்டிகளில் க்ளீன் ஷீட்டைப் பெற்றால் மட்டுமே இந்த சாதனையை அடைய முடியும். இதனால், டேவிட் ராயாவுக்கு இந்த விருது உறுதியாகியுள்ளது.
இந்த சீசனில் ஆர்செனல் அணி குறைவான கோல்களை (26) மட்டுமே எதிரணிக்கு வழங்கியுள்ளது. அடுத்து மான்செஸ்டர் சிட்டி 32 கோல்கள், லிவர்பூல் 47, யுனைடெட் 48 கோல்களை வழங்கியுள்ளது.
Summary
David Raya wins the Premier League Golden Glove third consecutive season.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்து காவலா்களுக்கு கண்ணாடி, கையுறை அளிப்பு

22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கில் கோப்பை வென்றது ஆர்செனல்!

அதிக கோல்கள் - அதிக க்ளீன் ஷீட் கொண்ட அணிகள் மோதும் இறுதிப் போட்டி..! யார் வெல்லுவார்கள்?

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



