மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருடப்பட்ட வெற்றி..! நடுவர்களை விமர்சித்த பார்சிலோனா வீரர்!

சாம்பியன்ஸ் லீக்கில் நடுவர்களின் மோசமான செயல்பாடுகள் குறித்து...

News image

ரஃபீனியா. - படம்: எஃப்சி பார்சிலோனா.

Updated On :15 ஏப்ரல் 2026, 11:36 am

சாம்பியன்ஸ் லீக்கில் நடுவர்களின் மோசமான தீர்ப்புகளினால் பார்சிலோனா அணி தோல்வியுற்றதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியா தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என கோல் அடித்தும், ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-3 என அத்லெடிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல பார்சிலோனா அணிக்கு தர வேண்டிய எந்த நியாயமான முடிவுகளையும் அளிக்க முடியவில்லை எனப் பலரும் குற்றம் சுமத்தினார்கள்.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரஃபீனியா அத்லெடிகோ ரசிகர்களை நோக்கி, “நீங்கள் அடுத்த போட்டியில் வெளியே செல்வீர்கள்” என சைகை மொழியில் கூறுவார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியிருப்பதாவது:

என்னைப் பொறுத்தவரை இது திருடப்பட்டது. இந்தப் போட்டி மட்டுமல்ல; முதல்கட்ட போட்டியும் அப்படித்தான். நடுவர்கள் மோசமாக செயல்படுகிறார்கள். அத்லெடிகோ மாட்ரிட் பல ஃபொல்களை செய்தும் அவர்களுக்கு எல்லோ கார்டு (மஞ்சள் அட்டை) காண்பிக்காதது ஆச்சரியமளிக்கிறது.

பார்சிலோனா வெற்றி பெறுவது அவர்களுக்குப் பயத்தைக் கொடுக்கிறது என்றார். முதல்கட்ட காலிறுதியில் 1 ரெட் கார்டு, இரண்டாம் கட்ட காலிறுதியிலும் 1 ரெட் கார்டு பார்சிலோனா அணிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Raphinha criticizes referees after Barcelona's CL elimination, says club was ''robbed''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.