ரோஹித் சர்மா தவறவிட்ட சாதனை!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடக்கும் முன்னமே ஆட்டமிழந்தார்.


247 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 240 இன்னிங்ஸில் 30 சதங்கள் 50 அரைசதங்களுடன் 9,978 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 22 ரன்கள் எடுத்திருந்தால் 10 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பார்.
ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் அடித்தவரும் ரோஹித் சர்மாதான் (264) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 முறை 200+ அடித்து சாதனை புரிந்துள்ளார்.
இதையும் படிக்க: சச்சின் சாதனையை முறியடித்த வார்னர்!
ரோஹித் இன்னும் 22 ரன்கள் அடித்திருந்தால் 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்கள் பட்டியலில் 6வது நபராகவும் உலக அளவில் 15வது நபராகவும் இருந்திருப்பார்.
இந்திய அணி 18 ஓவர்களுக்கு 124/2 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கோலி, ராகுல் இருக்கிறார்கள். ரோஹித் 56 ரன்களுக்கும் கில் 58 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி படத்தில் சில்க்காக நடித்தவர் யார் தெரியுமா?
இந்தியாவில் 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...