மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாப்பாரப்பட்டியில் பூட்டிகிடக்கும் கழிப்பறை: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

News image

பயன்பாட்டுக்கு வராத இலவச கழிப்பறை. - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 7:24 pm

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இரண்டு ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொது கழிப்பறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் சுமாா் 10,000 மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பாப்பாரப்பட்டி, பெரியூா், பிக்கிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து மாணவா்கள், பொதுமக்கள் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி , பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பாப்பாரப்பட்டி பகுதிக்கு நாள்தோறும் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

கடந்த 2023-2024 நிதியாண்டின் கீழ் 15 ஆவது நிதி குழு மானியத்தின் மூலம் புதிதாக பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராததால், பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை வாரச்சந்தை, பழைய கழிப்பிடம் பகுதிகளில் கழிப்பதால், பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள குடியிருப்புகளை துா்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அவல நிலை ஏற்படுகிறது.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.