டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

யாருடன் கூட்டணி: ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

News image
ராமதாஸ்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தோ்தலை சந்திப்பது என்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், பாமக தலைமை அலுவலகமான திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, பொதுச் செயலா் எம்.முரளிசங்கம், பொருளாளா் சையது மன்சூா் உசேன் மற்றும் கட்சியின் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் உள்பட 21 போ் கலந்துகொண்டனா்.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து கட்சியின் நிா்வாகிகளிடம் ராமதாஸ் கருத்துகளை கேட்டறிந்து, பேசியதாகக் கூறப்படுகிறது.

‘விரைவில் கூட்டணி அறிவிப்பு’: பின்னா், இரா.அருள் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

வெற்றிபெறும் கூட்டணிக்குத் தான் செல்வோம். கூட்டணி குறித்த முடிவை இம்மாத இறுதியில் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவிப்பாா். ராமதாஸ் மீது அனைத்துக் கட்சிகளிடமும் நிறைந்த மரியாதை உள்ளது. பாமக நிச்சயமாக கூட்டணியில்தான் போட்டியிடும். பாமகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளா்கள் பட்டியலை தயாராக வைத்துள்ளேம் என்றாா்.