2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆடுகளத்தை விட்டு வெளியேறிய ஹார்திக் பாண்டியா; பந்துவீசிய விராட் கோலி!

பந்தினை தடுத்தபோது கணுக்காலில் அடிபட்டதால் ஹார்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறி அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்குக்கு வந்தார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:11 am

DIN

பந்தினை தடுத்தபோது கணுக்காலில் அடிபட்டதால் ஹார்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறி அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்குக்கு வந்தார்.

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில்  இந்தியா - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 9-வது ஓவரை ஹார்தி பாண்டியா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் நேராக அடிக்க அதனை காலால் தடுக்க முயன்ற ஹார்திக் பாண்டியா கால் இடறி விழுந்தார். அதில் அவருக்கு கணுக்காலில் அடிபட்டது.

இந்திய அணியின் மருத்துவக் குழு முதலுதவி செய்தும் அவருக்கு கால்களை ஊன்றி நடப்பதில் சிரமம் இருந்ததால் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக சூர்யகுமார் ஃபீல்டிங்குக்கு வந்தார்.

ஹார்திக் 9-வது ஓவரில் 3 பந்துகளை மட்டுமே வீசியிருந்தார். மீதமுள்ள 3 பந்துகளை ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் வீச வந்தார் விராட் கோலி. அந்த ஓவரில் மீதமுள்ள மூன்று பந்துகளை வீசிய விராட் கோலி 2 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 

10 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.