இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால், உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கில் அணியில் இடம்பெறவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் அணியில் இடம்பெறமாட்டார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரத்த தட்டையணுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக சென்றதால் நேற்று முன் தினம் (அக்டோபர் 8) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றத்தை இந்திய அணியின் மருத்துவர் ரிஸ்வான் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.