டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:21 am

DIN


உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற முதல் அரையிறுதிப்  போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில்  சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா ( 47 ரன்கள்), ஷுப்மன் கில் (80 ரன்கள்), விராட் கோலி (117 ரன்கள்), ஸ்ரேயஸ் ஐயர் (105 ரன்கள்) மற்றும் கே.எல்.ராகுல் (39 ரன்கள்) எடுத்து அசத்தினர்.  இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் தனிநபர் ஒருவராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். அவர் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

ரோஹித் சர்மா - 28 சிக்ஸர்கள் (2023)
கிறிஸ் கெயில் - 26 சிக்ஸர்கள் (2015)
ஸ்ரேயஸ் ஐயர் - 24 சிக்ஸர்கள் (2023)
இயான் மோர்கன் - 22 சிக்ஸர்கள் (2019)
கிளன் மேக்ஸ்வெல் - 22 சிக்ஸர்கள் (2023)
டேரில் மிட்செல் - 22 சிக்ஸர்கள் (2023)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.