டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உலகக் கோப்பையில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல்  ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:18 am

DIN

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல்  ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் வீசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷகிதியை போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் மிட்செல் ஸ்டார்க். இந்த விக்கெட்டின் மூலம் உலகக் கோப்பையில் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக வீரர்களை போல்டாக்கிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுவரை 26 விக்கெட்டுகளை போல்டு மூலம்  மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றியுள்ளார்.

உலகக் கோப்பையில் அதிக போல்டு எடுத்த வீரர்கள்

மிட்செல் ஸ்டார்க் - 26 விக்கெட்டுகள்
வாசிம் அக்ரம் - 25 விக்கெட்டுகள்
லாசித் மலிங்கா - 18 விக்கெட்டுகள்
முத்தையா முரளிதரன் - 17 விக்கெட்டுகள்
கிளன் மெக்ராத் - 15 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.