மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சன் ரைசர்ஸ் அணிக்கு 172 ரன்கள் இலக்கு

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

DIN

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் களமிறங்கினர். அந்த அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குர்பாஸ் அவர் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார். ஜேசன் ராய் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்துத் தடுமாறியது. இந்த நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தியது. நிதிஷ் ராணா 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 35 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். அதன் பின் ரசல் அதிரடியாக 15 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணியின் மற்ற வீரர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. 

சன் ரைசர்ஸ் தரப்பில் நடராஜன் மற்றும் மார்கோ ஜேன்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். புவனேஷ் குமார், கார்த்திக் தியாகி, மார்கரம் மற்றும் மயங்க் மார்கண்டே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.