நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழ்நாடு அணிக்கு எதிராக ஃபாலோ ஆன் ஆன அஸ்ஸாம்!

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் அஸ்ஸாம் அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆகியுள்ளது.

News image
விஜய் சங்கர் (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 6:45 pm

DIN

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் அஸ்ஸாம் அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆகியுள்ளது.

எலைட் - குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் ஒரு வெற்றியும் பெறாமல் 4 டிராக்களுடன் 8 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அணியின் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். சாய் கிஷோர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் அணிக்கு எதிரான தமிழ்நாடு அணியின் ரஞ்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 132.3 ஓவர்களில் 540 ரன்கள் எடுத்தது. பிரதோஷ் 153, ஜெகதீசன் 125, விஜய் சங்கர் 112 ரன்கள் எடுத்தார்கள். 

அஸ்ஸாம் அணி முதல் இன்னிங்ஸில் 100.2 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆகியுள்ளது. அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.