மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சையத் முஷ்டாக் அலி இறுதிச்சுற்று: தமிழக அணி முதலில் பந்துவீச்சு

சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:30 am

DIN

சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தொடர்ந்து 3-வது வருடமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இந்தியாவின் சிறந்த டி20 அணியாக உள்ளது தமிழக அணி. காலிறுதி ஆட்டத்தில் கேரளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தியது.

2019-ல் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றில் கர்நாடகத்திடம் தமிழக அணி தோற்றது. அந்தக் காயத்தைப் போக்கும் விதமாக இன்று சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லியில் இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கர்நாடகம் 3  ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.