புது தில்லி: பேட்டிங் அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான் தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் ப்ளவர். இவரும் இவரது மூத்த சகோதரரான ஆண்டி ப்ளவரும் அந்த நாட்டிற்காக சேர்ந்து விளையாடி சாதனைகள் படைத்துள்ளனர்.
தனது ஓய்விற்குப் பிறகு கிராண்ட் ப்ளவர் பேட்டிங் பயிற்சியாளராக பணியைத் துவங்கினார். கடந்த 014-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பேட்டிங் அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான் தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.
வியாழனன்று கிரிக்கெட் தொடர்பான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, காலை உணவு சாப்பிடும் தருணத்தில் பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கானுக்கு பேட்டிங் தொடர்பாக அறிவுரை கூறினேன். என்னை விட அவரது டெஸ்ட் போட்டி அனுபவம் அதிகம் என்று நினைத்தாரா என்று தெரியாது; நான் கூறிய அறிவுரையை அவர் நல்லவிதமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார். அப்போது அங்கு இருந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவையெல்லாம் பயிற்சியாளர் வாழ்வில் நடக்ககூடிய ஒன்றுதான் அதன்பிறகு அங்கு பணிபுரிவது கசப்பான ஒரு அனுபவமாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


