2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆஸ்திரேலிய ஓபன்: 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி

இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்று 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வெல்வார் என...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:35 pm

எழில்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 3-வது சுற்றில் சீனாவின் கியங் வாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்று 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகின் 29-ம் நிலை வீராங்கனையான வாங்கிடம்  4-6, 6-7 (7-2), 5-7 எனத் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையை செரீனா வீழ்த்துவார் என்கிற எதிர்பார்ப்பு இதன் மூலம் மேலும் நீடிக்கிறது. கடைசியாக 2017-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற பிறகு செரீனா ஏந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லவில்லை. குழந்தை பிறந்த பிறகு கலந்துகொண்ட 7 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நான்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார் செரீனா. எனினும் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு அவர் இன்னும் காத்திருக்கவேண்டிய நிலைமையே தற்போது உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.