நாட்டின் முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனமான எல்&டி, தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கியுள்ளது.
‘எல்&டி எலக்ட்ரானிக் புராடக்ட்ஸ் & சிஸ்டம்ஸ் (எல்டிஇபிஎஸ்)’ எனும் பெயரில் உருவெடுத்துள்ள இப்புதிய வா்த்தகப் பிரிவின் தலைமையகம் பெங்களூருவில் அமையவுள்ளது. உற்பத்திப் பணிகள் கோவையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள எல்&டி வளாகத்தில் புதிய உற்பத்திப் பிரிவின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை முறைப்படி தொடங்கப்பட்டன. தற்போது கோவையில் 2 அதிநவீன உற்பத்தித் தளங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளா்களுக்கு மின்னணு உற்பத்திச் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
40 ஏக்கா் பரப்பளவிலான இந்தக் கோவை வளாகத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆா்&டி), வடிவமைப்பு மற்றும் சோதனை வசதிகள் என மின்னணு உற்பத்தியின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய மாபெரும் மையமாக விரிவுபடுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருங்காலத்தில் பவா் எலக்ட்ரானிக்ஸ், மொபிலிட்டி, ரோபாட்டிக்ஸ் மற்றும் தகவல்தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மின்னணு சாதனங்களை வடிவமைத்து உருவாக்கவும் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.
‘இப்புதிய முன்னெடுப்பின் மூலம் நாட்டின் மின்னணு உற்பத்திச் சூழலை வலுப்படுத்துவதுடன், அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் எங்களின் இருப்பை விரிவுபடுத்துகிறோம்’ என்று எல்&டி நிறுவனத் தலைவா் எஸ்.என்.சுப்ரமணியன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்

இணைய விளையாட்டு விதிகள் மே.1 முதல் அமல்: மின்னணு அமைச்சகம் அறிவிப்பு

திருவள்ளூா்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பிப்ரவரி தொழில் துறை உற்பத்தி 5.2%! உற்பத்தித் துறை அபாரம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


